பணத்தை கையாளும் வித்தையை கற்றுக் கொள்வோம் , காலமுழுவதும் அந்த பணம் நம்மை வசதியாக வாழ வைக்கும்

பணத்தை கையாளும் வித்தையை கற்றுக் கொள்வோம் , காலமுழுவதும் அந்த பணம் நம்மை வசதியாக வாழ வைக்கும்  


பணத்தை
பற்றிய போதிய புரிதல் இல்லாததால் தான் நாம் காலமுழுவதும் பணத்தை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நம் கண்முன்னால் பணக்காரர்கள் நம்மை போன்று கஷ்ட படுவதில்லை அவர்கள் நினைத்ததை போல வாழ்கிறார்கள் நினைத்த இடமெல்லாம் செல்கிறார்கள் ஆடம்பர கார் வாங்குகிறார்கள் விமானத்தில் பறக்கிறார்கள் , பொழுதுபோக்கிற்காக கூட நாடுவிட்டு நாடு சென்று வாழ்க்கையை மகிழ்வுடன் கழிக்கிறார்கள் ஆனால் நம்மால் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் குறைந்தளவு ஒரு கடனில்லா வாழ்க்கைகூட வாழ முடியவில்லையே என்ற விரக்தி நமக்கு வருவதுண்டு ஒரு சாமானியனின் ஆசையெல்லாம் பெரிய ஆடம்பர வாழ்க்கை அல்ல மாறாக கடனில்லா ஒரு வாழ்க்கை தான் விரும்புகிறான் அப்படிப்பட்ட வாழ்க்கையை அடைவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்

நம்முடைய பள்ளியில் கல்லூரியில் நாம் கல்வி பயில்கின்றே அனைத்து இடங்களிலும் எதையெல்லாமோ சொல்லித்தருகிறார்கள் ஆனால் பொருளாதாரம் சார்ந்த கல்வியை அழுத்தமா சொல்லி தருவதில்லை, நமக்கு சொல்லித்தருவதெல்லாம் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்பதை மட்டுமே சொல்லி தருகிறார்கள் அதனால் தான் நாம் கல்வி பயின்றே பிறகு படித்த படிப்புக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு வேலையில் சேர்ந்து காலமுழுவதும் ஏதாவதொரு முதலாளிகளுக்கு உழைத்து கொண்டு இருக்கிறறோம், அப்படியென்றால் ஏதாவது ஒரு இடத்தில் வேலை செய்ய கூடாதா என்று கேட்கலாம் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் அது தவறு இல்லை ஆனால் நாம் படித்த படிப்பு சம்பந்தமான வேலையை செய்து கொண்டு பிறகு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்றைக்கு நாம் சொந்தமாக தொழில் தொடக்கிறமோ அன்றைக்கும் தான் நமக்காக நாம் வேலை செய்வதை விட நமக்காக நம் பணம் பலமடங்கு அதிகமாகவே வேலை செய்யும். ஆனால் வேலையை மட்டுமே செய்ய பழகிய நமக்கு சொந்தமாக தொழில் துவங்க துணிச்சல் வருவதில்லை அப்படியே துணிச்சல் வந்தாலும் தொழில் துவங்கிய இரண்டு மூன்று மாதத்தில் இழுத்து மூடிட்டு மீண்டும் மாத சம்பள வேலைக்கு சென்று விடுகிறோம் பணத்தை கையாள்வது எப்படி என்று தலைப்பு வைத்துவிட்டு தொழில் துவங்குவதை பற்றி பேசுகிறாரே என்று நீங்கள் கேள்வி எழுப்புவது எனக்கு கேட்கிறது, தொழில் செய்யும் போது அதிகமான பணம் சம்பாதிக்க முடியும் ஆகையால் தான் தொழில் பற்றி சொன்னேன் இப்போது பணத்தை கையாள்வது பற்றி பார்ப்போம்

பணம் நம் அனைவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாது , பணம் பத்தும் செய்யும் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம் ஆனால் இதுலே எவ்ளோ பெரிய உண்மை அடங்கிருக்கிறது என்று இதை ஆராயமாட்டோம் மாறாக பணம் தான் எல்லாம் தீமைக்கும் வழிவகுக்கிறது என்று பணத்தை பற்றியே எதிர்மறை எண்ணத்தையே வளர்த்து கொள்கிறோம் , முதலாவது பார்த்த பழமொழியை மீண்டும் பார்ப்போம் பணம் பத்தும் செய்யும் பணம் பத்தும் செய்யும் என்றால் பத்து தீமையை செய்யும் என்றே நமக்கு பழக்கி வைத்துள்ளார்கள், பணம் இருந்தால் நாம் நினைத்த அனைத்தயும் எளிதில் அடைந்து விடுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான ஓன்று என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் சிறுவயதில் பள்ளிக்கூடங்களில் சிறு சேமிப்பு பற்றி படித்திருப்போம் அது எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது நமக்கு கொடுக்கிறே ஐந்து ரூபாய் பத்து ருபாய் பானங்களை சேர்த்து வைத்து அதுவே நூறு இருநூறு என்று பெரிய தொகையாக மாறிவிடும் , எங்களுடைய வீட்டில் எனது மருமகள் மெர்ஸி அவள் எட்டாவது வகுப்பு படிக்கும் போது அவளுக்கு கொடுக்கிறே கொஞ்ச கொஞ்ச பணத்தையெல்லாம் சேர்த்து வைத்து ஆயிரம் ரூபாய்க்கு மேலே சேர்த்து விடுவாள் என்னுடைய அவசர தேவைக்காக அப்போதே ஐந்நூறு ரூபாயெல்லாம் அவளிடம் வாங்கிருக்கிறேன் இதை எதற்க்காக சொல்கிறேன் என்றால் பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைக்கும் பழக்கத்தை நாம் கையால் வேண்டும், அதன் பிறகு எந்தவொரு காரணத்தயும் சொல்லாமல் நம்முடைய வரவுக்கு கீழாக மட்டுமே செலவு செய்ய வேண்டும், மாதம் இருபதாயிரம் ரூபாய் வருமானம் வருகிறதென்றால் அதிலிருந்து இருப்பது சதவிகிதம் சேமிப்பு என்று தனியாக எடுத்து ஒதுக்கி வைத்து விட வேண்டும் அந்த பணத்தை எக்காரணம் கொண்டும் எடுக்கவே கூடாது இப்படி வருகிற வருமானத்திலிருந்து தொடர்ந்து ஒரு தொகையை நாம் சேமிக்கும் போது அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மிக பெரிய தொகையாக வளர்ச்சியடைந்து நிற்கும் , நம்மிடம் இந்த மாதியான சேமிப்பு இருக்கும் போது ஒரு மாதம் திடீரெண்டு வேலை இல்லாமல் போனாலோ அல்லது உடம்பு சரியில்லாமல் போனாலோ நாம் யாரிடமும் பணத்திற்கு போய் நிற்கவேண்டிய அவசியம் வராது.

இரண்டாவது திருவிழா பண்டிகை நாட்களில் கடன் வாங்கி செலவு செய்ய கூடாது ஒரு நாள் பண்டிகைக்காக ஐம்பது ஆயிரம் கடன் வாங்கி பிறகு அந்த வருடம் முழுவதும் அதற்கு வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு இருப்போம் அதற்கு பதிலாக இருக்கிறே பணத்தில் மட்டும் பண்டிகை நாட்களை கொண்டாட பழகி கொள்ள வேண்டும் ஆனால் நம்முடைய மனநிலை ஒரு நாள் கொண்டாட்டம் தானே ஜாம் ஜாம்முனு கொண்டாடுவோம் என்று தோன்றும் நம்மிடம் இருக்கும் பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும் , கடன் வாங்கி திருமணம் செய்யவே கூடாது , கடன் வாங்கி வீடு கட்டக்கூடாது , கடன் வாங்கி திருமண காரியங்களுக்கு குடும்பமாக போவதை தவிர்த்து கையிலிருக்கு ஒரு தொகையை அவர்களுக்கு அனுப்பிவிடுவது நல்லது சில தவிர்க்க முடியாத நாம் கட்டாயம் போக வேண்டும் என்ற நிகழ்வுகளை தவிர்க்க கூடாது , போகாவிட்டாலும் பரவாயில்லை என்ற நிகழ்வுகளுக்கு கடன் வாங்கி போக கூடாது பணம் இருந்தால் தாராளமாக போகலாம் இப்படியாக நாம் தேவையற்ற செலவுகளை குறைக்கும் போது தேவையற்ற கடன் சுமை நம் தலையில் விழாது , தேவையில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவேண்டி அவசியம் வராது

நம் சேமிக்கின்ற பணத்தை எந்த வித தேவையற்ற செலவுக்கும் எடுக்காமல் அதை வைத்து நிலங்கள் வாங்கலாம் நகை வாங்கலாம் பங்கு சந்தை பற்றிய தெளிவு இருந்தால் னால பங்குகளில் முதலீடு செய்யலாம் , பணம் நம்மிடம் இருக்கும் போது தான் இந்த உலகம் நம்மை மதிக்கிறதோ இல்லையோ நம்மீது நமக்கு ஒரு மரியாதை வரும் நம்மீது நமக்கு தன்னம்பிக்கை வரும் பணத்தை சேர்க்க சேர்க்க அது நமக்கு புது வித உற்சாகத்தை தரும், பணத்தை சேமிக்க கற்று கொள்ளுங்கள், பணம் மிகவும் அவசியமானது , பணமெல்லாம் வீண் என்று சொல்லிக்கிறவர்களுடைய ஆலேசனையை கேட்காதீர்கள், வாழ்க்கையில் பணம் மட்டும் தான் முக்கியம் என்று சொல்லவில்லை ஆனால் பணமில்லையென்றால் நம்மால் ஒரு நாளை கூட நிம்மதியாக வாழ முடியாது ஆகையால் பணத்தை சேமிப்போம் வரவுக்கு கீழ் செலவு செய்வோம் மகிழ்வுடன் வாழ்வோம் நன்றி மீண்டும் வேறொரு பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் பென்னி ஜான்..







Comments

Popular posts from this blog

தெளிவான புரிதல் – உறவுகளில் அன்பை மலரச் செய்யும் வேர்கள்

பணத்தின் சக்தி: பணம் நமக்காக வேலை செய்ய ஆரம்பித்தால்